மேலும் செய்திகள்
வறட்சியால் தரையிறங்கும் காட்டு மாடுகள்
31-Mar-2025
எஸ்.புதுார் : எஸ்.புதுார் ஒன்றியத்தில் காட்டு மாடுகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் படையெடுப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இவ்வொன்றியத்தில் மேலவண்ணாரிருப்பு, கீழவண்ணாரிருப்பு, வெள்ளிக்குன்றம்பட்டி, குன்னத்துார் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஏராளமான காட்டு மாடுகள் வசிக்கின்றன. இவை விவசாய காலங்களில் அடிவார கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. தற்போது கோடை துவங்கி மலையில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வற்றியுள்ளது. இதனால் இம்மாடுகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் படையெடுக்கத் துவங்கி விட்டன. பகல் நேரங்களில் கிராமப் பகுதிகளை ஒட்டிய வயல்களுக்கு கூட்டமாக வரும் காட்டு மாடுகள் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மலைப்பகுதியிலேயே இம்மாடுகளுக்கு குடிப்பதற்கு தேவையான தண்ணீர் குட்டைகளை ஏற்படுத்தி மாடுகள் அடிவார கிராமங்களுக்குள் வராமல் தடுப்பு, அகழிகளை ஏற்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
31-Mar-2025