உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வடமாநிலத்தவர் அருவாள் தயாரிப்பு விலை குறைவால் வரவேற்ற விவசாயிகள்

வடமாநிலத்தவர் அருவாள் தயாரிப்பு விலை குறைவால் வரவேற்ற விவசாயிகள்

திருப்புவனம் : திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் முகாமிட்டு வடமாநிலத்தவர் அருவாள் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர்.தமிழகத்தில் அருவா தயாரிப்பிற்கு மிகவும் புகழ்பெற்றது திருப்பாச்சேத்தி அருவா, மற்ற அருவாக்களை காட்டிலும் திருப்பாச்சேத்தி அருவா கூர்மையாகவும் எடை குறைவாகவும் இருப்பதால் பலரும் விரும்பி வாங்குவார்கள்.தற்போது மத்திய பிரதேசம் போபால் பகுதியைச் சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக கிராமங்களில் முகாமிட்டு விவசாய கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு குழுவில் மூன்று முதல் ஐந்து பேர் வரை உள்ளனர். மதுரையில் இருந்து கனரக வாகனங்களின் பழைய இரும்பு பட்டைகளை வாங்கி வந்து கிராமம் கிராமமாக சென்று அங்கேயே பட்டறை அமைத்து தேவைப்படும் பொருட்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். நேற்று திருப்புவனம் அருகே லாடனேந்தலில் நான்கு பேர் கொண்ட குழு ரோட்டோரம் பட்டறை அமைத்து அருவா, மண்வெட்டி, இறைச்சி வெட்டும் கத்தி உள்ளிட்டவைகளை தயாரித்து விற்பனை செய்தனர்.ராஜபாண்டி கூறுகையில், திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பட்டறைகளில் இறைச்சி வெட்டும் கத்தி ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வடமாநிலத்தவர்கள் நம் கண்முன்னேயே இரும்பை வெட்டி கத்தி தயாரித்து 350 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

vijai hindu
மார் 31, 2025 10:51

கொலைகாரர்களுக்கு ரவுடிகளுக்கு ரொம்ப வசதியா போச்சு குறைந்த விலையில் கத்தி காவல்துறை கவனித்த நடவடிக்கை வேண்டும் வட மாநிலத்த ஆட்களை கண்காணிக்க வேண்டும்


முக்கிய வீடியோ