உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வெயிலின் தாக்கம் அதிகரிப்பு வைக்கோலை பாதுகாக்கும் விவசாயிகள்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு வைக்கோலை பாதுகாக்கும் விவசாயிகள்

திருப்புவனம் : தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து வைக்கோல் கட்டுகளை காப்பாற்ற விவசாயிகள் தார்ப்பாய் போட்டு பாதுகாத்து வருகின்றனர்.வைகை பாசனத்தை நம்பி திருப்புவனம் தாலுகாவில் நெல், கரும்பு விவசாயம் நடைபெறுகிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி திருப்புவனம் வட்டாரத்தில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடை முடிந்துள்ளது. திருப்புவனம் வட்டாரத்தில் நெல் அறுவடையின் போதே கேரளா, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வைக்கோல் கட்டுகளை கொள்முதல் செய்து கொண்டு சென்று விட்டனர். மீதமிருக்கும் வைக்கோல் கட்டுகளைத்தான் கால்நடை வளர்ப்போர் வாங்கி இருப்பு வைத்துஉள்ளனர். ஒரு கட்டு வைக்கோல் 150 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்பனையானது. விவசாயிகள் அறுவடையின் போதே வைக்கோல் வாங்கி இருப்பு வைத்து கொள்வது வழக்கம். தமிழகத்தில் பிப்ரவரி முதலே வெயிலின்தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் திடீரென வெம்பா பனி மற்றும் சாரல் மழையால் வைக்கோல் வீணாகி வருகின்றன. இதனை தவிர்க்க விவசாயிகள் பலரும் வைக்கோலை தார்ப்பாய் போட்டு பாதுகாத்து வருகின்றனர். கால்நடை வளர்ப்பவர்கள் கூறுகையில், தற்போது இருப்பு வைத்துஉள்ள வைக்கோல் அடுத்த மாதம் வரை தான் வரும், இனி கோடை விவசாயம் குறைவாக உள்ள நிலையில் அதில் இருந்து வைக்கோல் கிடைப்பது கடினம், விலை கடுமையாக உயரும்.எனவே தற்போது இருப்பு வைத்துள்ள வைக்கோலை பாதுகாத்து வருகிறோம், கறவை மாடு வளர்ப்பில் செலவீனம் அதிகரித்து வரும் நிலையில் மான்யம் வழங்கப்படுவதும் குறைந்து வருகிறது. கால்நடை வளர்ப்பவர்களுக்கு தார்ப்பாய் உள்ளிட்டவை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ