உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொழில்நுட்ப குறைபாடு விவசாயிகள் கோரிக்கை

தொழில்நுட்ப குறைபாடு விவசாயிகள் கோரிக்கை

திருப்புத்துார், : விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவில் இணைய தளத்தில் உள்ள தொழில்நுட்ப குறைபாட்டால் சில கிராமத்தினர் பதிவு செய்ய முடியவில்லை. அந்த குறைபாட்டை சரி செய்ய கோரியுள்ளனர். விவசாயிகளின் அனைத்து தரவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு மத்திய,மாநில அரசுகளின் சலுகைகள் வழங்க அவர்களுக்கு தனித்துவமான 11 இலக்க விவசாய அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் நில ஆவணங்கள்,ஆதாருடன் சென்று பதிவு செய்து கொள்ள மார்ச் 31 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்புத்தூர் அருகே உள்ள ஆத்தங்குடி, பலவான்குடி,ஆலத்துப்பட்டி போன்ற கிராம விவசாயிகள் இணையதளத்தில் உள்ள தொழில்நுட்ப குறைபாட்டால் பதிவு செய்ய முடியவில்லை. இது குறித்து மார்க்.கம்யூ. தாலுகா செயலர் முருகேசன் கூறுகையில், இக்கிராம விவசாயிகளுக்கு இணையதளத்தில் கிராமத்திற்கான கோடு எண் இருந்தும் தேர்வு செய்ய முடியாததால் அவர்கள் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் அதை சரி செய்து பதிவு செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ