சாலைப்பழுதால் விவசாயிகள் அவதி
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சாலைப்பழுதால் பக்தர்களும் விவசாயிகளும் அவதிப்படுகின்றனர். இவ்வொன்றியத்தில் மதுராபுரி ஊராட்சியில் உச்சிக்கருப்பர் கோயில் செல்லும் சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது இச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. டூவீலர் கூட செல்லமுடியாமல் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளும் அவதிப்படுகின்றனர்.