உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நீர்நிலைகளை பாதுகாக்க விவசாயிகள் நடைபயணம்

நீர்நிலைகளை பாதுகாக்க விவசாயிகள் நடைபயணம்

திருப்புவனம் : திருப்புவனத்தில் கண்மாய், குளங்களை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய நடைபயணத்தை விவசாயிகள் மேற்கொண்டனர். பாண்டிய மன்னர் காலத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் சங்கிலி தொடராக கண்மாய்கள், குளங்கள் உருவாக்கப்பட்டன. திருப்புவனம் நெல்முடிகரை கண்மாய் நான்கு கல் மடைகளுடன் அமைக்கப்பட்டது.இது போன்று பல்வேறு கண்மாய், குளங்கள் பாசன வசதிக்காகவும் குடிநீர் தேவைக்காகவும் உருவாக்கினர்.நாளடைவில் இவை உரிய பராமரிப்பின்றி சிதைந்து வருகிறது. இதை பாதுகாக்கும் நோக்கிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரம்பரிய நடை பயணம் மேற்கொண்டனர். கல்வெட்டு ஆய்வாளர் வேதாச்சலம், பேராசிரியர் சேதுராமன், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், வைகை பூர்வீக பாசன விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் ஆதிமூலம், ஒருங்கிணைப்பாளர் கனநாதன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரன், விவசாயிகள், ரகுராமன், பிரபு, பாலகுரு உட்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !