உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்தில் தந்தை, மகன் பலி: * காரைக்குடி அருகே பரிதாபம்

விபத்தில் தந்தை, மகன் பலி: * காரைக்குடி அருகே பரிதாபம்

திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இரண்டாவது போலீஸ் பீட் பகுதியில் ரோடு வேலை நடப்பதால் நேற்று திருப்புத்துார், தேவகோட்டையிலிருந்து காரைக்குடி செல்லும் பஸ்கள் மாற்று வழியில் திருச்சி- - ராமேஸ்வரம் ரோடு வழியாக சென்றன. மதியம் 3:00 மணி அளவில் தேவகோட்டை ராம்நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் விஜயகுமார் 65, மகன் மணிகண்டன் 25 இருவரும் மானகிரி வழியாக டூவீலரில் காரைக்குடியில் சர்வீசிற்கு விடப்பட்டிருந்த காரை எடுக்க சென்றனர்.அப்போது திருப்புத்துாரிலிருந்து காரைக்குடிக்கு சென்ற தனியார் பஸ் மானகிரி பைபாஸ்க்கு அருகில் செல்லும் போது டிரைவர் பக்க முன் டயர் வெடித்தது. அதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த டூ வீலர் மீது மோதியது. விஜயகுமார், மணிகண்டன் இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தும் இறந்தனர். பஸ்சும் பள்ளத்தில் சரிந்தது. பயணிகள் உயிர் தப்பினர். நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ