மேலும் செய்திகள்
விஜய் கட்சி மாநாடு குறித்து தலைவர்கள் கருத்து
28-Oct-2024
காரைக்குடி:''நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நிரந்தர ஓட்டு வங்கி இல்லை. அதனால் அவருக்கு யதார்த்தமான அச்சம் வந்திருக்கும்,'' என காரைக்குடி அருகே கண்டனுாரில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அரசியல் கூட்டத்தின் தொகுப்பை சமூக வலைதளத்தில் பார்த்தேன். இனிமேல் தான் அவர்களுடைய கொள்கை விளக்கங்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டும். விஜய் மாநாட்டில் கூட்டத்தை பார்த்தேன். அது ஒரு உருவமாக அமைப்பாக மருவி தேர்தலை சந்திக்க கூடிய அளவிற்கு உருவெடுக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். சாதுர்யமான முடிவை எடுப்பார்களா அல்லது பிம்பத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம் போகப் போகத் தான் தெரியும். சீமானுக்கு ஒருமுறை ஓட்டளித்தால் மறுமுறை ஓட்டளிப்பதில்லை. அதனால், சீமானுக்கு யதார்த்தமான அச்சம் வந்திருக்கும். சீமானுக்கு நிரந்தர ஓட்டு வங்கி இல்லாததால், அவருக்கு அச்சம் வந்திருக்கும் என்றார்.
28-Oct-2024