உள்ளூர் செய்திகள்

பேனரால் அச்சம்

திருப்புவனம் : திருப்புவனத்தில் பல இடங்களில் வைக்கப்பட்ட பேனர் பலவும் சேதமடைந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் உள்ளனர். திருப்புவனம் நகரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருபுறமும் 100க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைகளுக்கு முன்பு பிளக்ஸ் போர்டுகளை முகப்பில் வைத்துள்ளனர். இதுதவிர அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் ரோட்டை ஒட்டி பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். தற்போது காற்று வீசும் காலம் என்பதால் சேதமடைந்த பிளக்ஸ் போர்டு காற்றின் வேகம் தாங்காமல் விழும் அபாயம் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசார் பிளக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை