மேலும் செய்திகள்
எஸ்.ஐ.,களுக்கு பயிற்சி நிறைவு
07-Jan-2025
காரைக்குடி,:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் பிரணிதா. நேற்று இரவு அங்கு பிரச்னை தொடர்பாக புகார் மனு அளிப்பதற்காக வி.சி.க., வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் வந்திருந்தார். அவர் எஸ்.ஐ., பிரணிதாவிடம் வாக்குவாதம் செய்ததாகவும், பின் தகராறாக மாறி எஸ்.ஐ., தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.எஸ்.ஐ., பிரணிதா கூறியதாவது:வி.சி.க., நிர்வாகி இளைய கவுதமன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த நிலையில் என்னை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்னை கீழே தள்ளிவிட்டு சட்டையை கழட்டி விடுவேன். போஸ்டர் ஒட்டி விடுவேன். உனக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் என்றார். இதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன்'' என்றார்.
07-Jan-2025