உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குப்பை கோடவுனில் தீ விபத்து

குப்பை கோடவுனில் தீ விபத்து

சிவகங்கை; சிவகங்கை காளவாசல் பிளாஸ்டிக் குப்பை தரம் பிரிக்கும் கோடவுனில் தீ விபத்து நடந்தது. தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். சிவகங்கை காளவாசல் வாட்டர் டேங்க் அருகே நகராட்சிக்கு சொந்தமான பிளாஸ்டிக் குப்பை தரம் பிரிக்கும் கோடவுன் உள்ளது. நகரில் சேகரமாகும் பிளாஸ்டிக் குப்பை தரம் பிரிக்கப்படுகிறது. நேற்று மாலை 5:30 மணிக்கு சிலர் தீ வைத்துள்ளனர். நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராம், பொறியாளர் முத்து இடத்தை ஆய்வு செய்தனர். தீயை அணைக்கும்போது தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்ததால் நகராட்சி பாதாளசாக்கடை அடைப்பு எடுப்பதற்கான கம்பரசர் காற்று மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனத்தை பயன்படுத்தி தீயை நகராட்சி பணியாளர்கள் அணைக்க முயற்சித்தனர். கமிஷனர் கிருஷ்ணராம் கூறுகையில், தரம் பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பை தான் எரிந்துள்ளது. உள்ளே பழுதான இயந்திரங்கள் இருந்தன. புகை மூட்டமாக உள்ளது. தீயை அணைத்த பிறகு தான் சேதங்கள் குறித்து தெரியவரும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை