மேலும் செய்திகள்
ரேஷன் பொருள் வாங்க 2 கி.மீ., நடை பயணம்
10-Sep-2025
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நடந்த மீன்பிடித் திருவிழாவில் கிராமத்தினர் சாக்கு பைகளில் மீன்களை அள்ளிச்சென்றனர். அரளிக்கோட்டை கிராமத்தில் கடந்தாண்டுக்கான விவசாயப் பணி நிறைவடைந்த நிலையில், அங்குள்ள அரளிக்கண்மாயில் நீர் இருப்பு குறைந்து வருவதால், நேற்று மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. இதில் அரளிக்கோட்டை, ஏரியூர், ஜமீன்தார்பட்டி, ஆபத்தாரணபட்டி, மதகுபட்டி, மாம்பட்டி, திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். கிராம பெரியவர்கள் துண்டு வீசியவுடன் கரையில் தயாராக இருந்த பொதுமக்கள் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி ஊத்தா, கச்சா, கொசுவலை, மீன்பிடி வலை, அரிகூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் மீன்களைப் பிடித்தனர். இதில் ஜிலேபி, குரவை, விரா உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் அதிகம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
10-Sep-2025