சிவகங்கையில் ரூ.1.23 கோடி கொடி நாள் வசூல் சாதனை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கடந்த ஆண்டிற்கான கொடி நாள் வசூலாக ரூ.1 கோடியே 23 லட்சத்து 85 ஆயிரம் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இம்மாவட்ட கொடி நாள் வசூலாக கடந்த ஆண்டிற்கு ரூ.1.20 கோடி இலக்கு நிர்ணயித்தனர். ஆனால் அதற்கும் மேலாக ரூ.1 கோடியே 23 லட்சத்து 85 ஆயிரத்து 763 வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளனர். மாவட்ட அளவில் 2302 முன்னாள் படைவீரர்கள், 698 விதவைகள் உள்ளனர். நடப்பாண்டில் 129 பேர்களுக்கு திருமண உதவி தொகை, புற்றுநோய் நிவாரண நிதி, முதியோர் பென்ஷன், ஆயுட்கால மாதாந்திர நிதி என பல்வேறு வகையில் ரூ.39.35 லட்சம் வழங்கியுள்ளனர். கொடி நாள் விழாவில் மட்டுமே 33 பயனாளிகளுக்கு ரூ.7.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.