உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரிமண்டபம் ரோட்டை மூழ்கடித்த வெள்ளம் 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

அரிமண்டபம் ரோட்டை மூழ்கடித்த வெள்ளம் 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

மானாமதுரை: மானாமதுரை அருகே அரிமண்டபம் செல்லும் ரோட்டை வெள்ள நீர் மூழ்கடித்துச் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 4 கிராமமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மானாமதுரை அருகே மேலப்பசலை ஊராட்சிக்குட்பட்ட அரிமண்டபம் கிராமத்திற்கு செல்லும் ரோடு மிகவும் மோசமாக இருந்த நிலையில் அதனை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். தற்போது ரோடு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த ரோட்டை தீயனுார்,சேதுராயனேந்தல், அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இந்த ரோடு வழியாக டவுன் பஸ்சும் சென்று வருகிறது.கடந்த சில நாட்களாக மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தற்போது அரிமண்டபம் அருகே நாட்டார் கால்வாயில் ரோட்டை மறைத்தபடி வெள்ள நீர் செல்வதால் மேற்கண்ட 4 கிராமங்களுக்கு பஸ்போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது. கிராம மக்கள் கூறியதாவது: அரிமண்டபத்தின் அருகே நாட்டார் கால்வாயில் ரோடு உள்ள பகுதியில் பாலம் அமைக்காமல் சிறிய அளவிலான குழாய் மட்டுமே பதிக்கப்பட்டுள்ளதால் அதிகளவில் தண்ணீர் வரும் போது ரோட்டை மூழ்கடித்து செல்கிறது. மாவட்ட நிர்வாகம் தற்போது ரோடு போடும் பணி நடைபெற்று வரும் நிலையில் பழைய குழாய்களை அகற்றிவிட்டு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி