உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கல்

முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கல்

மானாமதுரை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரசிகர்கள் அவர் குணமடைய வேண்டி வழிபட்டனர். ரஜினி வீடு திரும்பியதை அடுத்து மானாமதுரையில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நகரச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஹோலி கிராஸ் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு மாவட்டச் செயலாளர் ராமேஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் உணவு வழங்கினர். நிர்வாகிகள் கருப்புசாமி, ராஜா,முருகன்,ராமு,நாகராஜன்,நாகநாதன், ரவிக்கண்ணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி