உள்ளூர் செய்திகள்

உணவு திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகமூர்த்தி மெட்ரிக் பள்ளியில் உணவுத் திருவிழா தாளாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. செயலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் கவுரி சாலமன் வரவேற்றார். ஆர்.எம்.எஸ். குழும தொழிலதிபர் அஜய் பெருமாள் பேசுகையில், இன்றைய குழந்தைகளும் மாணவர்களும் துரித உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும், தென்னிந்திய உணவுகள், சிறுதானிய உணவுகளின் அவசியத்தை எடுத்துரைத்தார். விழாவில் குழந்தைகள் சிறு தானியம் மற்றும் சத்துள்ள உணவுகளை தயாரித்து காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் மீனா அமுலரசு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை