மேலும் செய்திகள்
மாணவர்கள் சங்கமம்
28-Dec-2024
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரியைசேர்ந்த முன்னாள் மாணவர்கள் 41 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சந்தித்துக் கொண்டனர்.காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரியில் 1981 முதல் 1984 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பலரும் அடையாளம் தெரியாத வகையில் மாறிப் போனதால், ஒருவருக்கொருவர் பெயர்களை கேட்டறிந்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். முன்னதாக அழகப்பர் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அழகப்பா அரசு கல்லூரியில் உள்ள அரங்கில் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், விவசாயிகள் என தங்களை தானே அறிமுகம் செய்து கொண்டு, தங்களது கல்லூரி அனுபவங்களை மேடையில் பேசினர்.
28-Dec-2024