உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டோல்கேட் நிர்வாகியை தாக்கிய4 பேர் கைது

டோல்கேட் நிர்வாகியை தாக்கிய4 பேர் கைது

திருப்புத்துார்; திருப்புத்துாரிலிருந்து திருமயம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செண்பகம்பேட்டை டோல்கேட் உள்ளது. நேற்று புதுக்கோட்டையிலிருந்து வந்த காரில் போதிய பாஸ்டேக் இல்லாததால் கட்டணம் செலுத்த முடியவில்லை. காரில் வந்த நான்கு பேருக்கும், டோல்கேட் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. காயமடைந்த டோல்கேட் நிர்வாகி திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காரில் வந்த திருப்புத்துாரைச் சேர்ந்த வெங்கடேசன், பாலாஜி, மனோகரன், பாதுஷா ஆகிய நான்கு பேரை கீழச்சிவல்பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ