கள்ளச்சாராயம் விற்ற நான்கு பேர் கைது
சிவகங்கை:சிவகங்கை மதுவிலக்கு போலீசார், செங்குளிப்பட்டி பகுதியில் நேற்று சோதனையிட்ட போது, முனியன் என்பவரின் மகன் விஜயகுமார், 27, வீட்டின் பின்னால் காட்டுப்பகுதியில் 4 லிட்டர் கள்ளச்சாராயம், அதை தயாரிக்க கூடிய பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். விஜயகுமார், சேகர், 34, விஜயராஜ், 30, கொடிஅரசன், 24, ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.