உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் நால்வர் தற்கொலை

தேவகோட்டையில் நால்வர் தற்கொலை

தேவகோட்டை; ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர். தேவகோட்டை நாச்சியப்பன் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஏலம்மாள் 27., சண்முகம் கொத்தனார் வேலை செய்கிறார். சண்முகம் தினமும் குடித்து விட்டு மனைவி ஏலம்மாளிடம் தகராறு செய்துள்ளார். மன வேதனையடைந்த மனைவி ஏலம்மாள் வீட்டில் சமையல் கூடத்தில் துாக்கிட்டு இறந்து போனார். * தேவகோட்டை பழைய சருகணி ரோட்டில் வசிப்பவர் கார்த்திகேயன். இவரது மனைவி கவிதா 35., கார்த்திகேயனும் கொத்தனார் வேலை செய்கிறார். தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் கவிதா வீட்டில் துாக்கிட்டு இறந்து போனார். *தேவகோட்டை பழைய சருகணி ரோட்டில் வசிப்பவர் முத்துச்சாமி 40, இவரது மனைவி சூரியா, கொத்தனார் வேலை செய்து வந்த முத்துச்சாமி தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மன வேதனையில் இருந்த முத்துச்சாமி துாக்கிட்டு இறந்து போனார். * தேவகோட்டை அருகே பெருவத்தியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி காளீஸ்வரி 35, இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். காளீஸ்வரி நோயால் அவதிப்பட்டு உள்ளார். கணவரிடம் தனது கஷ்டத்தை கூறினார். கணவர் சமாதானம் கூறி உள்ளார். இருப்பினும் காளீஸ்வரி வீட்டில் துாக்கிட்டு இறந்து போனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ