உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விளையாட்டு போட்டி மாற்றம்     

விளையாட்டு போட்டி மாற்றம்     

சிவகங்கை, செப்.12-தினமலர் செய்தி எதிரொலியாக காலாண்டு தேர்வின் போது செப்., 16 ல் நடப்பதாக இருந்த முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி செப்., 19 க்கு மாற்றப்பட்டது. முதல்வர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி செப்., 9 ல் துவங்கி 25 வரை நடைபெறும் என அறிவித்துள்ளனர். மாவட்ட அளவில் சிவகங்கை, காரைக்குடி, காளையார்கோவில் உட்பட பல்வேறு இடங்களில் இப்போட்டி நடக்கிறது. இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செப்., 16 ல் காலாண்டு தேர்வு துவங்குகிறது. அன்றைய தினத்தில்  பள்ளி மாணவிகளுக்கென நீச்சல், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தனர். இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக செப்., 16 அன்று பள்ளி மாணவிகளுக்கென நடப்பதாக இருந்த போட்டிகள் அனைத்தும், செப்., 19 அன்று மாற்றி அமைத்துள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் தெரிவித்தார். ///  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்