மேலும் செய்திகள்
கந்த சஷ்டி கொடியேற்றம் திருப்போரூரில் கோலாகலம்
03-Nov-2024
தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பூப்பல்லக்கில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் எழுந்தருளினார்.நவ.,2 ம் தேதி காப்பு கட்டுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு அபிேஷக, சிறப்பு பூஜைகள் நடந்தது. 6 ம் நாள் விழாவில் வள்ளி, தெய்வானை முருகன் திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் நிறைவாக முருகன், வள்ளி, தெய்வானையுடன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, விடையாற்றியவுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றது.
03-Nov-2024