கஞ்சா விற்றவர்கள் கைது
சிவகங்கை: சிவகங்கை தனிப்படை எஸ்.ஐ., சரவணக்குமார் உள்ளிட்ட போலீசார் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகம் படும் படியாக நின்ற அண்ணாமலை நகர் லிங்கம் மகன் குருசாமி 21, நத்தபுரக்கி சின்னச்சாமி மகன் தமிழரசன் 21 ஆகியோரிடம் விசாரித்தனர். இருவரிடம் இருந்தும் 17 பொட்டலங்களில் 85 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.