உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை சாவக்கட்டு ஊருணியில்  குப்பை கொட்டி தீ வைப்பு  

சிவகங்கை சாவக்கட்டு ஊருணியில்  குப்பை கொட்டி தீ வைப்பு  

சிவகங்கை: ஊருணியை பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே கொஞ்சமும் பொறுப்பின்றி குப்பையை சிவகங்கை சாவக்கட்டு ஊருணியில் கொட்டி தீ வைப்பதால், நுரையீரல் பாதிப்பிற்கு மக்கள் உள்ளாகின்றனர்.சிவகங்கை நகராட்சி 15வது வார்டில் சாவக்கட்டு ஊருணி உள்ளது.இந்த வார்டிற்கு உட்பட்ட வீடு, வர்த்தக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரிக்க கொண்டு செல்ல வேண்டும்.ஆனால், குப்பைகளை கொட்ட இடமின்றி நகராட்சி துாய்மை பணியாளர்கள் சாவக்கட்டு ஊருணிக்குள் கொட்டி விடுகின்றனர். ஊருணிக்குள் கொட்டிய குப்பையில் தீ வைத்து விடுகின்றனர். இக்குப்பையில் தீ பரவி, புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது.இதனால் இந்த வார்டிற்கு உட்பட்ட அம்பேத்கர் முதல் தெரு உட்பட பல்வேறு தெரு மக்கள், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி