வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அறநிலைய துறை கமிஸ்நரா தங்க தகிடு ஒட்டபோராறு? வேலை பாட்டுக்கு நடக்கவேண்டியதுதானே? என்ன கொடுமை... மனிதனுக்கு சுவாமி காக்க வேண்டும்... மனிதன் தெய்வத்தை காக்க வைக்கிறார்?! இதற்காக்கவே அறநிலையத்துறை அகற்றப்படவேம்படும்?
திருக்கோஷ்டியூர்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள்கோயில் மூலவர் அஷ்டாங்க விமானத்தில் தங்கத் தகடு ஒட்டும் பணி அறநிலையத்துறை துணை ஆணையர் விடுப்பால் நிறுத்தப்பட்டுள்ளது.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வரலாறு,புராணச் சிறப்பு மிக்க அஷ்டாங்க விமானம் புகழ் பெற்றது.இந்த மூலவர் விமானத்திற்கு தங்கத் தகடு ஒட்டும் பணி நவ.14ல் துவங்கியது. விமானத்திற்கு செப்புக் கவசம் தயாரிக்கப்பட்டு அதற்கான வேலைகளும், தங்கத்தகடு தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.அறநிலையத்துறை மண்டல துணை ஆணையர் கண்காணிப்பில் கோயில் வளாகத்தில் பணிகள் நடக்கிறது. துணை ஆணையர் ஒரு மாத மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதனால் தங்கத் தகடு ஒட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பணி பாதிக்காமலிருக்க மாற்றுப்பணியில் துணை ஆணையர் நியமிக்க பக்தர்கள் கோரியுள்ளனர்.