உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இட நெருக்கடியில் தவிக்கும் அரசு கல்லுாரி மாணவிகள்

இட நெருக்கடியில் தவிக்கும் அரசு கல்லுாரி மாணவிகள்

சிவகங்கை: சிவகங்கையில் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் இல்லாததாலும் முறையான அடிப்படை வசதியில்லாததாலும் நெருக்கடியில் தவித்து வருவதாக மாணவிகள் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரி 1998ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லுாரியில் 13 இளங்கலை பாடப்பிரிவும், 7 முதுகலை பாடப்பிரிவும் உள்ளது. இரண்டு ஷிப்டிலும் 2500 மாணவிகள் படிக்கின்றனர். 14 நிரந்தர பேராசிரியர்களும், 110 கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றுகின்றனர்.இளங்கலையில் ஒரு துறை பாடப்பிரிவுக்கு 3 வகுப்பறை வேண்டும். முதுகலையில் ஒரு துறைக்கு 2 வகுப்பறை வேண்டும். இது தவிர பேராசிரியர்களுக்கான துறை அலுவலகம் வேண்டும். 2500 மாணவர்கள் படிக்கின்ற கல்லுாரியில் மாணவிகளுக்கு ஓய்வு அறை இல்லை. மொத்தம் 40 வகுப்பறை தான் உள்ளது. கூடுதலாக 20 வகுப்பறை வேண்டும். கூடுதல் வகுப்பறை இல்லாததால் மாணவிகள் மரத்தடியில் படிக்கும் சூழல் உள்ளது. அதேபோல் மாணவிகளுக்கு போதிய கழிப்பறை வசதியில்லை. அரசு மகளிர் கல்லுாரியை ஆய்வு செய்து மாணவிகள் சிரமமின்றி படிப்பதற்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டவும், கழிப்பறை வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ