உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் அரசு பள்ளி: அரசு அதிகாரிகள் பாராமுகத்தால் மாணவர்கள்...அச்சம்

பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் அரசு பள்ளி: அரசு அதிகாரிகள் பாராமுகத்தால் மாணவர்கள்...அச்சம்

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுகப்பட்டி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. 97 மாணவர்கள், 5 ஆசிரியர்களுடன் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியின் நுழைவு வாயில் சாலையிலிருந்து 5 அடி பள்ளத்தில் இருப்பதால் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். நுழைவு வாயிலில் காம்பவுண்ட் சுவர் உண்டு, ஆனால் கேட் இல்லை. மாணவர்கள் பெரும்பாலும் வெளியே தான் அமர்ந்து படிக்கின்றனர். மூன்றுபுறமும் பொதுப்பணித்துறை சார்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் சுவர் இல்லை. பள்ளி வளாகத்தை ஒட்டி மரங்கள், புதர் செடிகள் வளர்ந்து காடுகள் போல் காட்சியளிப்பதோடு, பாம்பு புற்றுகளும் வளர்ந்துள்ளது. கழிப்பறை அருகிலேயே புற்று இருப்பதால் மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களுக்காக சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட இயந்திரம் தற்போது பயன்பாடின்றி கிடக்கிறது. மாணவர்கள் போர்வெல் தண்ணீரை குடிக்க வேண்டியுள்ளது. 2017 ம் ஆண்டு ரூ.1 கோடியே 68.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடம் சேதமடைந்து கிடக்கிறது. பலமுறை புகார் அளித்தும் பள்ளியில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி அடைந்து வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ