உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லலில் வீணாகும் அரசு வாகனங்கள்

கல்லலில் வீணாகும் அரசு வாகனங்கள்

காரைக்குடி: கல்லல் யூனியன் அலுவலகத்தில், அதிகாரிகள் ஜீப் பயன்பாடின்றி மழையிலும் வெயிலிலும் வீணாகி வருகிறது.கல்லல் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள் உள்ளது. இங்கு, ஆணையாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரின் பயன்பாட்டிற்கு அரசு சார்பில் தனித்தனி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் யூனியன் அலுவலகத்திற்கு தற்போது புதிய வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கல்லல் யூனியன் அலுவலகம் நுழைவுவாயிலில், கடந்த ஓராண்டுக்கும்மேலாக அதிகாரிகள் பயன்படுத்திய பழைய ஜீப் மழையிலும் வெயிலிலும் வீணாகி வருகிறது. ஒரு புதிய ஜீப் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு புதிய வாகனங்கள் வழங்கிடவும், பயன்பாடின்றி வீணாகி வரும் வாகனங்களை பாதுகாக்கவோ அப்புறப்படுத்தவோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை