டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பிரதமர் மோடி தான் காரணம் எச்.ராஜா பேட்டி
காரைக்குடி : டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு ஒரே காரணம் பிரதமர் மோடி தான் என்று தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா தெரிவித்தார்.காரைக்குடியில் அவர் கூறியதாவது: காரைக்குடி அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்ததற்கு அரசின் கவனக்குறைவே காரணம். உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். விவசாயிகளிடம் செந்தில்பாலாஜி வசூல் செய்ய முடியாது என்பதால் கள் இறக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். டங்ஸ்டன் திட்டத்தில் தனக்கு வேண்டியவர்கள் டெண்டர் எடுத்து விடுவார் என்று ஸ்டாலின் நினைத்திருப்பார். அதுபோன்று யாரும் வராததால் எதிர்க்கிறார். டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு முழு காரணம் மோடி தான். 17 ஆண்டு ஆண்ட நீதிக்கட்சியில் ஒரு பட்டியலினத்தவர் கூட அமைச்சராக வில்லை. பட்டியலினத்தவர் முதன்முதலாக அமைச்சரானது ராஜாஜி மந்திரி சபையில் தான். கோயில் நுழைவு போராட்டத்திற்கு தலைமையேற்றவர் வைத்தியநாத ஐயர். உதவியாக இருந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். கோயில் நுழைவு சட்டத்தை கொண்டு வந்தவர் ராஜாஜி. அதனை எதிர்த்தவர். ஈ.வெ.ரா., டங்ஸ்டன் ரத்துக்கு ஒரே காரணம் மோடி தான். வெற்றிக்கு நிறைய தகப்பன் வருவார்கள். தோல்வி எப்போதும் அனாதை தான்.வேங்கைவயல் பிரச்னையில் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று நான்தான் முதலில் கூறினேன். அன்று திருமாவளவன் உட்பட யாரும் கேட்கவில்லை. இன்று கேட்கிறார்கள் என்றார்.