உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பருவநிலை மாற்றத்தால் தாமதமாகும் அறுவடை

பருவநிலை மாற்றத்தால் தாமதமாகும் அறுவடை

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் காலநிலை மாற்றத்தால் நெல் அறுவடை தாமதமாகி வருகிறது.இத்தாலுகாவில் பரவலாக மழை பெய்து பாலாறு, உப்பாறு, மணிமுத்தாறில் தண்ணீர் ஓடுகிறது. பல கண்மாய்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் விவசாயிகள் 1200க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருந்தனர்.பெரும்பாலான பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் குறைவான வெயில், மழைதுாறல் என காலநிலை அடிக்கடி மாறுவதால் விவசாயிகள் அறுவடையை தள்ளி வைத்து வருகின்றனர்.பயிர்களை அறுவடை செய்யும் பட்சத்தில் அவற்றை காய வைக்க போதுமான வெயிலும் இல்லை, உலர் களங்களும் போதுமானதாக இல்லை என்கிறார்கள் விவசாயிகள். அதே நேரம் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் விவசாயிகள் மேலும் கவலையில் உள்ளனர்.கூலியாட்கள் கிடைக்காத போது அறுவடை நேரத்தில் மழைபெய்தால் வயலில் அறுவடை இயந்திரம் இறங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.டயர்களால் இயங்கும் அறுவடை இயந்திரங்களை வயலுக்குள் இறக்கவே முடியாது. பல் சக்கரம் கொண்ட இயந்திரங்களால் மட்டுமே வயலுக்குள் இறங்கி செல்ல முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை