உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பேரம் படியவில்லையா...: சத்துணவு ஊழியர் நியமனத்தில் இழுபறி: வேலைக்காக காத்திருப்போர் அதிருப்தி

பேரம் படியவில்லையா...: சத்துணவு ஊழியர் நியமனத்தில் இழுபறி: வேலைக்காக காத்திருப்போர் அதிருப்தி

சிவகங்கை: மாவட்ட அளவில் சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் 460 சமையல், அங்கன்வாடி உதவியாளர் காலியிடங்களுக்கு நேர்முக தேர்வு முடித்தும், பணி நியமன ஆணை வராததால், பேரம் படியாததால் இழுபறி நீடிக்கிறதா என்ற கேள்வி விண்ணப்பதாரர்களிடம் எழுந்துள்ளது.மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,155 முதன்மை, 397 குறு மையம் என 1,552 அங்கன்வாடி மையங்களில் 24,000 குழந்தைகள் சத்துணவு சாப்பிடுகின்றனர். அதே போன்று சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் 1,273 சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. இங்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 90,593 மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர்.அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 29 அங்கன்வாடி உதவியாளர், 4 அங்கன்வாடி பணியாளர் பணிக்கு ஏப்., 23 வரை விண்ணப்பங்கள் வரவேற்றனர். அதே போன்று சத்துணவு மையங்களில் 1,016 சமையல் உதவியாளர் காலி பணியிடம், 427 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாக கொண்டு விண்ணப்பங்கள் வரவேற்றனர்.இப்பணியிடங்களுக்கு எம்.ஏ., பி.எட்., பி.இ., முடித்த பட்டதாரிகள் 8,096 பேர் வரை விண்ணப்பித்தனர். இவர்களது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மே மாதம் நேர்முக தேர்வு நடத்தினர். நேர்முக தேர்வு முடிந்த நிலையில், அரசியல் கட்சியினர், புரோக்கர்களுக்கான பேரம் படியாததால், சத்துணவு, அங்கன்வாடி மையங்களுக்கு தேர்வு செய்தவர்களை நியமிப்பதில் இழுபறி நீடிப்பதாக பட்டதாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.* சென்னைக்கு சென்ற தேர்வு பட்டியல்:சமூக நலத்துறை அதிகாரி கூறியதாவது: மாவட்ட அளவில் காலியாக உள்ள சத்துணவு, அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு நடத்தி, இறுதி பட்டியலை சென்னை சமூக நலத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி விட்டோம். அங்கிருந்து பட்டியல் வந்தால் தான், தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி, பணியில் சேர அறிவுறுத்தப்படும், என்றார்.///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ