உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீடு தேடி ரேஷன் திட்ட துவக்க விழா  

வீடு தேடி ரேஷன் திட்ட துவக்க விழா  

சிவகங்கை: சிவகங்கை அருகே ஒ.புதுாரில் வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் தாயுமானவன் திட்டத்தை அமைச்சர் பெரிகருப்பன் துவக்கி வைத்தார். விழாவிற்கு கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் வரவேற்றார். மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜா, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் நதர்ஷா, துணை பதிவாளர் ஜெய்சங்கர், பாம்கோ மேலாண்மை இயக்குனர் பாலு, தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பவானி, சிவகங்கை நகராட்சி கவுன்சிலர் அயூப்கான் பங்கேற்றனர். இத்திட்டத்தின் மூலம் மாவட்ட அளவில் உள்ள 856 ரேஷன் கடைகளில் 70 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் உள்ள 33 ஆயிரத்து 294 ரேஷன் கார்டுகளை சேர்ந்த 65 ஆயிரத்து 690 உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள். துணை பதிவாளர் பாபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை