மனித சங்கிலி போராட்டம்
சிவகங்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் எதிரில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.மாநிலத் துணைத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அரசு பணியாளர் சங்கம் கவுரி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் மாயாண்டி, அரசு பணியாளர் சங்கம் மாவட்டச் செயலாளர் திருஞானம்கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.