உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொடர்மழையால் நோயால் பாதிக்கப்படுவோர் ... அதிகரிப்பு l:கிராமங்களில் சுகாதாரப்பணியில் தொய்வு

தொடர்மழையால் நோயால் பாதிக்கப்படுவோர் ... அதிகரிப்பு l:கிராமங்களில் சுகாதாரப்பணியில் தொய்வு

மானாமதுரை:மானாமதுரை, இளையான்குடியில் 3 நாட்களாக மழை பெய்துவருவதால் ரோடு, தாழ்வான பகுதிகளில் மழை நீரோடு,கழிவுநீரும் சேர்ந்து தேங்கியுள்ளது. இதனால் காய்ச்சல்உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மானாமதுரை, இளையான்குடியில் ரோடுகள் முறையாக அமைக்காததால் தாழ்வான பகுதிகளில் மழை நீரோடு கழிவு நீரும் சேர்ந்து தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டு பலர் காய்ச்சல், ஜலதோஷம், சளி மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் துாய்மை பணியாளர்களை கொண்டு ஓரளவிற்கு மழை காலங்களில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டாலும் கிராம பகுதி களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக் காலம் முடிந்துள்ளதாலும், ஊராட்சிகளில் போதிய நிதி வசதி இல்லாத காரணத்தினாலும் சுகா தாரப் பணிகள் மேற்கொள்ளாததால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு கிராம மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் கூறிய தாவது: மானாமதுரை நகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்ட போது அருகில் உள்ள ஊராட்சி பகுதிகளை மானாமதுரையோடு இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களை ஒட்டி யுள்ள சில பகுதிகளில் மட்டும் நகராட்சி நிர்வாகம் சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு குடிநீர், சாலை, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். ஆகவே அரசு உடனடி யாக ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் அல்லது உள்ளாட்சி அமைப்பு களுக்கு போதிய நிதியை விடுவித்து அடிப்படை வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் தொற்று பரவாத வகையில் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்காதவாறு முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ