உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வருமான வரி ஆலோசனை கூட்டம்

வருமான வரி ஆலோசனை கூட்டம்

தேவகோட்டை : தேவகோட்டை வர்த்தக சங்கம், காரைக்குடி வருமான வரி துறை இணைந்து வியாபாரிகளுக்கு வருமான வரி தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் வர்த்தக சங்க தலைவர் மகபூப்பாட்சா தலைமையில் நடந்தது. டிஜிட்டல் யுகத்தில் வரி செலுத்துவோரின் பங்கு, வரி தொடர்பாக வியாபாரிகளின் கடமைகள், வரி செலுத்துவோரின் குறைகளுக்கு தீர்வு பற்றி விவாதங்கள் நடைபெற்றன. காரைக்குடி வருமான வரித் துறை அதிகாரி சுப்பிரமணியன், தேவகோட்டை வருமான வரி பட்டய கணக்காளர் ராமசாமி துரை, கணக்கு தணிக்கையாளர் பாண்டி சரவணன் ஆலோசனை வழங்கினர். தேவகோட்டை வர்த்தக சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் பங்கேற்றனர். வர்த்தக சங்க துணை செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை