உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரியில் இன்னோவேஷன் தினம்

கல்லுாரியில் இன்னோவேஷன் தினம்

திருப்புத்துார்; திருமயம் லேனா விலக்கு மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜெயபரதன் செல்லையா இன்னோவேஷன் இன்குபேஷன் மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சி மையம் சார்பில் இன்னோவேஷன் தினம் அனுசரிக்கப்பட்டது.கல்வி குழும நிறுவனர் ஜெயபரதன் செல்லையா நிறுவனர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிக்கு மெளண்ட் சீயோன் கல்வி நிறுவன தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமையுரையாற்றினார். இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் விவியன் ரேச்சல் ஜெய்சன், முதல்வர் பாலமுருகன் பேசினர்.கவிஞர் தங்கம் மூர்த்தி நிறுவனரின் தொலைநோக்குப் பார்வை குறித்து பேசினார். கல்லுாரியுடன் ஏவிங் இந்தியா டெக் பிரைவேட் லிமிடெட், ஆரோன் டெக்னாலஜிஸ், டெல்பி-டிவிஎஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முதன்மையர் ராபின்சன் வரவேற்றார். இயந்திர பொறியியல் துறை தலைவர் திருமாவளவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !