உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசுப்பள்ளிகளில் இணைய சேவை துண்டிப்பு

அரசுப்பள்ளிகளில் இணைய சேவை துண்டிப்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அரசுப் பள்ளிகளில் இன்டர்நெட் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலை, நடு நிலைப்பள்ளிகளில் இன்டர்நெட் இணைப்பு, ஸ்மார்ட் வகுப்புகளுடன் கூடிய ஹைடெக் லேப் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 15 மாணவர் களுக்கு அதிகமாக படிக்கும் துவக்க பள்ளிகளில் இணைய சேவையுடன் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளுக்கும் வெண்டர்கள் மூலம் இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்பட்டது. பல பள்ளிகளில் இன்டர்நெட் துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் டோல் ப்ரீ எண்ணிற்கு தலைமை ஆசிரியர்கள் புகார் செய்யும் பட்சத்தில் சரி செய்யப்படாமலேயே 2 நாட்களில் சரி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வருகிறது. ஆனால் வெண்டர்களை தொடர்பு கொள்ளும் போது அவர்கள் சரி செய்ய கூடுதல் கட்டணத்தை கேட்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பல பள்ளிகளில் ஒரு மாதம் வரை இன்டர்நெட் கிடைக்காமல் மாணவர் களின் கற்றல் பாதிக்கப் படுகிறது. இதை தவிர எமிஸ், வருகைப் பதிவேடு, வினாடி வினா, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் ஆன்லைன் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆசிரியர்கள் தெரிவித்ததாவது: இணைய இணைப்பு கொடுக்கும் போது வெண்டர்கள் 6000 முதல் 25,000 ரூபாய் வரை பல பள்ளிகளில் கூடுதலாக வசூலித்தனர். அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் வேறு வழியில்லாமல் தலைமை ஆசிரியர்கள் சொந்த பணத்திலும், பள்ளி பராமரிப்பு நிதியிலிருந்தும் கொடுத்தனர். அந்த தொகைக்கு ஜி.எஸ்.டி., பில் வாங்கித் தந்தால் பணத்தை தரு வதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் சில வெண்டர்கள் பில் தர மறுக்கின்றனர். தற்போது ஒரு மாதம் வரை இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர் களுக்கு ஆன்லைன் பாடங்கள் மற்றும் பணிகளை செய்ய முடியாமல் சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட வெண்டர்களிடம் தெரிவித்தால் அவர்கள் இணைப்பை சரி செய்ய ரூ.1000 கேட்கிறார்கள். உடனடியாக இன்டர் நெட் சேவையை சீரமைத்து வரும் காலங்களில் உடனுக்குடன் பழுதுகளை சரிசெய்ய மாவட்ட நிர் வாகமும், பள்ளிக் கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி