உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பணி நியமன ஆணை வழங்கல்

பணி நியமன ஆணை வழங்கல்

திருப்புத்துார் : கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.இக்கல்லுாரியில் எல் அன்ட் டி, சென்னை, நோகியா சொலுசன்ஸ் சென்னை, ஹீண்டாய் மோட்டார்ஸ் சென்னை, அசோக் லேலண்ட் ஓசூர், ராயல் என்பீல்டு அகாடமி சென்னை, லட்சுமி மெஷின் டூல்ஸ், கோவை, அக்வா சப் இன்ஜூனியரிங் கோவை, அசானி காஸ்ட் கன்சல்டன்ட் கோவை ஆகிய நிறுவனங்கள் வளாக நேர்முகத் தேர்வை நடத்தின. 180 மாணவர்கள் தேர்வு பெற்றனர். முதல்வர் கே.சசிக்குமார் வரவேற்றார். தலைவர் எம்.சொக்கலிங்கம் பணிநியமன ஆணை வழங்கினார். வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் பி.வைத்தியநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை