உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஜாக்டோ- ஜியோ ஆலோசனை

ஜாக்டோ- ஜியோ ஆலோசனை

சிவகங்கை: சிவகங்கையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சகாய தைனேஷ் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், இளங்கோவன் பேசினர். மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் வாக்குறுதி படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை, முதுகலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும். தொடக்க கல்வி துறையில் 90 சதவீத ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243 யை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிப்., 14ல் அனைத்து வட்டார தலைநகரில் மாலை நேர ஆர்ப்பாட்டம், பிப்., 25 ல் சிவகங்கை அரண்மனை வாசல் முன் மறியல் போராட்டம் நடத்துவதென தீர்மானித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை