கடம் பயிற்சி நிறைவு விழா
மானாமதுரை: மானாமதுரையில் கர்நாடக இசை கச்சேரிகளில் முக்கிய பங்கு வகிக்கும் கடம் இசைக்கருவியை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலைமுறை, தலைமுறையாக தயாரித்து வருகின்றனர். தற்போது அவர்களது வாரிசுதாரர் கடம் தயாரித்து வருகிறார். இங்கு தயாராகும் கடத்தை உலகம் முழுவதும் உள்ள கடம் இசைக்கலைஞர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் இளையராஜா,தேவா, ஏ.ஆர்.ரகுமான், அனிரூத் போன்றவர்களும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த கடத்தை தயாரிக்க 20க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழகம் பூம்புகார் சார்பில் கடந்த 2 மாதமாக கடம் தயாரிப்பாளர் ரமேஷ் பயிற்சி அளித்தார். பயிற்சியின் நிறைவு விழாவில் பங்கேற்றவர்களுக்கு தமிழரசி எம்.எல்.ஏ.,சான்று வழங்கினார். பூம்புகார் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.