உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்ட பூஜை துவங்கியது

கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்ட பூஜை துவங்கியது

தேவகோட்டை,: தேவகோட்டை அருகே கண்டதேவி சிறிகிழிநாதர் என்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டது. இந்த தேரின் வெள்ளோட்டம் இன்று காலை 7:00 மணிக்கு நடைபெற உள்ளது.தேர் வெள்ளோட்ட விழா நேற்று மாலை துவங்கியது. தேரில் வலம் வர உள்ள கும்பங்கள் கோயிலில் உள்ள கொடிமரம் முன் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்களுடன் துவங்கியது. தொடர்ந்து தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது. கோயிலில் உள்ள சொர்ண மூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன் உட்பட அனைத்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலையில் தேருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட உள்ளது. டி.ஐ.ஜி. துரை பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை