உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்மாய் சங்க தேர்தல்

கண்மாய் சங்க தேர்தல்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பிரமனுார் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடந்தது. பிரமனூர், வாடி கிராமம், வாவியேரந்தல், வயல்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வாக்களித்தனர். காலை ஏழு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை தேர்தல் நடந்தது. பதிவான 367 வாக்குகளில் நான்கு வாக்குகள் செல்லாதவையாகின. பிரமனூரைச் சேர்ந்த அழகுசெல்லச்சாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அழகுராஜாவை 133 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ