உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் நிரம்பிய கண்மாய்

காரைக்குடியில் நிரம்பிய கண்மாய்

காரைக்குடி: காரைக்குடியில் பெய்து வரும் தொடர் மழையால் கண்மாய்,குளங்கள் உட்பட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. காரைக்குடியில் நேற்று முன்தினம் மாலை 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது.15.5 செ.மீ., மழை பதிவானது. கனமழை காரணமாக காரைக்குடியில் பல பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.கால்வாய் பலவும் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழைநீர் செல்ல வழியின்றி தண்ணீர் கடைகளுக்கு புகுந்தது. அதிகம் பாதிப்படைந்த பகுதிகளை கலெக்டர் ஆஷா அஜித் பார்வையிட்டார்.மேயர் முத்துத்துரை கமிஷனர் சித்ரா உட்பட நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தண்ணீர் செல்ல வழி இல்லாத இடங்கள் இயந்திரம் மூலம் சரி செய்யப்பட்டு தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.கனமழை காரணமாக நாட்டார் கண்மாய்,காரைக்குடி பெரிய கண்மாய், குடிகாத்தான் கண்மாய் உட்பட பல நிரம்பி மறுகால் பாய்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
அக் 13, 2024 09:58

இயற்க்கை நியதி. ஆணையும் தண்ணீரும் தான் செல்லும் வழித்தடங்களை மாற்றிக்கொள்வது இல்லை. எனவே அரசு தண்ணீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்புகள் சரிசெய்யவேண்டும்


புதிய வீடியோ