காரைக்குடி சகாயமாதா சர்ச் விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
காரைக்குடி: காரைக்குடி செக்காலை சகாயமாதா சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. காரைக்குடி செக்காலை சகாய மாதா சர்ச் கொடியேற்றம் பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் நடந்தது. கொடைக்கானல் செண்பகனுார் கல்லூரி அதிபர் ஆண்டோ சே கொடியை ஏற்றி வைத்தார். விழாவின் நவநாட்களில் தினமும் மாலை 5:30 மணிக்கு திருச்செபமாலையும் நவநாள் திருப்பலியும் நடைபெறுகிறது. ஆக. 10 ம் தேதி திருப்பலி நடைபெறுகிறது. ஆக. 16 திருப்பலி சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் தலைமையில் நடைபெறுகிறது. இதில் சிறுவர் சிறுமியருக்கு புது நன்மை வழங்கப்படுகிறது. தொடர்ந்து தேர்ப்பவனி நடைபெறுகிறது. ஆக. 17 ஞாயிறு திருவிழா நிறைவு திருப்பலி, முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் உறுதி பூசுதல் வழங்கப்படுகிறது.