மேலும் செய்திகள்
தி.மு.க., பொதுக்கூட்டம்
13-May-2025
தேவகோட்டை: தேவகோட்டை நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் தி.மு. க. தலைவர் கருணாநிதி 102 வது பிறந்த நாள் விழா நகராட்சி அலுவலகம் அருகில் கொண்டாடப்பட்டது.மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ்ரூசோ தலைமையில் நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.பஸ் ஸ்டாண்டில் பொதுக்குழு உறுப்பினர் மதார்சேட் தலைமையில் நடந்தது.ராம்நகர் அழகப்பா பூங்கா அருகில் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சேவியர், வர்த்தக அணி அமைப்பாளர் சரவணன் தலைமையில் நடந்தது.நிகழ்ச்சிகளில் வட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மருத்தாணி சண்முகம், தனபால், உட்பட அனைத்து பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.* திருப்புவனத்தில் எம்.எல்.ஏ., தமிழரசி தலைமையில் மக்களுக்கு இனிப்பு, போர்வை, வேட்டி, சேலை வழங்கப்பட்டன.விழாவில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.* இளையான்குடி வடக்கு ஒன்றிய நகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.
13-May-2025