மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழாக்கள்
22-Mar-2025
சிவகங்கை : கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.முன்னாள் ஊராட்சி தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் ஜோதிமணி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஆரோக்கியசாமி வரவேற்றார். தலைமையாசிரியர் தெய்வானை ஆண்டறிக்கை வாசித்தார். கல்வி விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழு தலைவி நித்யா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி வசந்தமலர், வானவில் மன்ற கருத்தாளர் ஜெயப்பிரியா பேசினர். ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.
22-Mar-2025