உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நல்லாசிரியர்களுக்கு பாராட்டு

நல்லாசிரியர்களுக்கு பாராட்டு

திருப்புத்துார் : திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேஷன்மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் ஒன்பது நல்லாசிரியர்களுக்கும், முன்னாள் மாணவர்கள் மூன்று பேருக்கும், திருக்குறள் செல்வி மூன்று பேருக்கும், அரசு மருத்துவகல்லூரிகளில் சேர்ந்துஉள்ள பதின்மூன்று அரசு பள்ளி மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது.பள்ளி நிறுவனர் விக்டர் முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரிய கருப்பன் ஆசிரியர்களையும், மாணவர்களையும் பள்ளி சார்பில் கவுரவப்படுத்தினார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கி ஊக்கப்படுத்தினார். பள்ளி சார்பாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் பேராசிரியர்வேலாயுத ராஜா, காளையார்கோயில் டயட் ஆசிரியர் சேவற்கொடியோன், சட்டப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் தாஜ் ரீபா மற்றும் திருக்குறளில் சாதித்த பள்ளி மாணவிகள் ஜெய்ஸ்ரீ வசந்தனா, புவனதர்ஷினி, தன்யஸ்ரீ ஆகியோர் கவுவிக்கப் பட்டனர்.சி.இ.ஓ. பாலுமுத்து, தனியார் பள்ளி டி.இ.ஓ. விஜய சரவணகுமார்,திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சண்முகவடிவேல், பேரூராட்சித் தலைவர் கோகிலாராணி நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செயலர் ரூபன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை