உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொழிலாளர் சங்க வாயிற் கூட்டம்

தொழிலாளர் சங்க வாயிற் கூட்டம்

சிவகங்கை: சிவகங்கையில் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் வாயிற் கூட்டம் நடந்தது.நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் பருவ கால ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதலில் தனியார் ஈடுபடுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பணி மூப்பு பட்டியல் வெளியிடுவதோடு, கிடப்பில் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டை நோக்கி ஊர்வலமாக செல்லும் கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் சிவகங்கை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மண்டல தலைவர் கே.திருவளர்செல்வம் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன் துவக்க உரை ஆற்றினார்.மண்டல செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் கே.சண்முகம், மாநில செயலாளர் ஏ.பாலசுப்பிரமணியன் பேசினர். மண்டல பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி