மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
08-Oct-2025
சிவகங்கை: சிவகங்கையில் இயங்கி வரும் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு வழக்கு விசாரணை நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை அரண்மனைவாசல் முன் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சித்திரைச்சாமி தலைமை வகித்தார். பொருளாளர் தீபன் சக்ரவர்த்தி, இணை செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்நாதன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியநாதன், காங்., முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், அ.ம.மு.க., நிர்வாகி உதயகுமார், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு நிர்வாகி கே.வி., சேகர், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் பாலையா, வர்த்தக சங்க தலைவர் அறிவு திலகம், பகீரதநாச்சியப்பன், வழக்கறிஞர்கள் அழகர்சாமி, பிரபாகரன், துஷாந்த் குமார், சுதா, ராமலிங்கம், ஆதிமூலம், தங்கபாண்டியன், மதி உட்பட அனைத்து கட்சி, வழக்கறிஞர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
08-Oct-2025