உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை வைகை ஆற்றில் மணல் திட்டுக்களை காப்போம்

மானாமதுரை வைகை ஆற்றில் மணல் திட்டுக்களை காப்போம்

மானாமதுரை; மானாமதுரை வைகை ஆற்றில் உருவான மணல் திட்டுக்களை பாதுகாக்கும் வகையில் இரவில் மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மானாமதுரை வழியாக ராமநாதபுரம் தண்ணீர் சென்றடைந்ததும் தற்போது தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது.இந்நிலையில் மானாமதுரை நகரை ஒட்டியுள்ள வைகை ஆற்றில் தற்போது மணல் திட்டுக்கள் காட்சி அளிக்கின்றன. 15 ஆண்டுக்கு முன்பு வைகை ஆற்றில் மணல் குவியல் அதிக இடங்களில் காட்சி அளித்தது. தற்போது மணல் திருட்டு மற்றும் கழிவு நீர் வைகை ஆற்றில் கலப்பதால் மணல் இன்றி நாணல் செடிகளும், கருவேல மரங்களும் வளர்ந்து காணப்படுகின்றன.தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதன் எதிரொலியாக ஆங்காங்கே மணல் திட்டுக்கள் உருவாகியுள்ள நிலையில், மணலை சிலர் இரவில் தலைச்சுமையாக கடத்தி வருகின்றனர். போலீசார் மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை